அறையில் உள்ள யானை



மே 27 அன்று கேரளாவின் பாலக்காட்டில் ஒரு கர்ப்பிணி யானை அதன் பிறக்காத குழந்தையுடன், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட ஒரு பழத்தை சாப்பிட்டு இறந்த செய்தி, சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை முதலில் பதிவிட்ட விதம் மற்றும் அதன் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, வரும் நாட்களில் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டது. இது இன்றைய இந்தியாவில் ஊடகங்களின் பங்கு மற்றும் இந்தியர்கள் ஊடகங்களை நுகரும் விதம் பற்றி தெளிவாக சொல்கிறது. என்.டி.டி.வி நிருபர் ஷைலஜா வர்மா, இதை பதிவிடும் போது மூன்று தவறுகளைச் செய்தார்: (1) தவறான மாவட்டம், பாலக்காட்டுக்கு பதிலாக மலப்புரம், (2) தவறான பழம், தேங்காய்க்கு பதிலாக அன்னாசி, மற்றும் இறுதியாக (3 ) யானைக்கு வேண்டுமென்றே பழத்தை உண்ணக் கொடுத்ததாகக் கூறினார். இந்த பொய்கள் அல்லது அரை உண்மைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு உண்மைக்கு புறம்பாக உள்ளது என்பதை நாம் ஆராய்வோம்.

தவறுக்கு வர்மா மன்னிப்பு கோரியுள்ளார்

ஒரு என்.டி.டி.வி கதையில்


கேரளாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டமாக மலப்புரம் உள்ளது. அதனால் யானைகளை முஸ்லிம்கள் கொல்வதாகவும், அதனால் இந்துக்கள் முஸ்லிம்களை விட தார்மீக உயர் நிலையில் இருப்பதாகவும் கூற பாஜக ட்ரோல்ஸ் (BJP trolls) இச்சம்பவத்தை ஒரு பொன்னான வாய்ப்பைக் கண்டன. விரைவில் குற்றவாளிகளின் அம்சாத் அலி மற்றும் தமீம் ஷேக் என்ற இரண்டு முஸ்லிம் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்தின் மன்னார்கட் பிரிவில் யானை இறந்ததை மாவட்ட வன அலுவலகர் கே.சுனில்குமார் உறுதிப்படுத்தினார். இந்த விவகாரத்தில் பி வில்சன் என்ற உள்ளூர் ரப்பர் தோட்டத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் விசாரிக்கப்படுவதாகவும், அம்சாத் அல்லது தமீம் என்ற பெயரில் யாரும் விசாரிக்கப்படவில்லை என்றும் பாலக்காடு காவல் கண்காணிப்பாளர் ஜி.சிவ விக்ரம் தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் படேல் உம்ராவ்

மதவெறியின் அனைத்து தன்மைகளையும் வெளிப்படுத்துகிறார்



பிரசாந்த் படேல் உம்ராவ்

படம்: க்வின்ட் (The Quint)


கே. சுனில் குமார், இந்த விலங்கு அன்னாசிப்பழத்தை உட்கொண்டது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று மேலும் தெளிவுபடுத்தினார். சம்பந்தப்பட்ட வனத்துறையின் விசாரணை அதிகாரி யு. ஆஷிக் அல கூறுகையில், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் படி யானை உண்மையில் காட்டு பன்றிகள் போன்ற ஆக்கிரமிப்பு விலங்குகளை தடுக்க வைத்த கச்சா குண்டு அடைக்கப்ப்ட்ட தேங்காயை உட்கொண்டது என்பது தெரியவந்துள்ளது என்றார் . இது யானை வேண்டுமென்றே கொல்லப்பட்டது என்ற சந்தேகத்தை நீக்குகிறது. ஒரு காட்டு யானையின் அருகே சென்று உணவு அளிப்பது மிகவும் ஆபத்தானது, மேலும் உள்ளூர்வாசிகளுக்கு இது நன்றாகத் தெரிந்து இருக்கும் என்று சுனில் குமார் கருதுகிறார். கேரளாவில் காட்டுப்பன்றிகள் பயிர்களை அழித்து வருகின்றன, மேலும் இந்த விலங்குகளை விஞ்ஞான ரீதியாக தடுப்பதற்கான வழி இல்லாததால், விவசாயிகள் இம்முறைகளை அடிக்கடி நாட வேண்டியிருக்கிறது.

இப்போது நாம் "எப்படி" என்பதை ஆராய்ந்தோம், "ஏன்" என்பதை ஆராய்வோம். அர்னாப் கோஸ்வாமி ன்ற வலதுசாரி ஊதுகுழல்களால் கூட ஒப்புக் கொள்ளப்பட்டபடி கோவிட் -19 இன் பரவலை மிகவும் ற்றிகரமாக கையாண்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகும். இது வலதுசாரி பிரச்சாரத்தில் கம்யூனிஸ்ட் ஆளும் அரசை தொடர்ந்து இழிவுபடுத்துவதற்கான திடீர் முடிவைக் ஏற்படுத்தியது. ஆனால் யானையின் மரணம் குறித்த செய்தி, கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் புதிதாக பொய் பிரசாரத்தை திட்டமிட உதவியது. இது இயற்கையில் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான நெறிமுறைகளை இந்திய கொண்டுள்ளது போலான பொய்யான பார்வையில் இருந்து வருகிறது. இந்த அவதூறு பிரச்சாரத்தின் சிறப்பு என்னவென்றால் மனசாட்சியற்ற வெளிப்படையான அரசியலற்ற கதை பின்னணியே. ஆகவே, ஒவ்வொரு புனிதமான (sanctimonious) ட்விட்டர் பிரபலமும் அண்மையில் பாக்ஜன் எண்ணெய் தீ போன்ற கடுமையான சுற்றுச்சூழல் பேரழிவுகளை வசதியாக / யுத்த தந்திரமாக புறக்கணித்து இந்த தற்போதைய பிரபலமான போக்கில் இணைந்துள்ளனர்.



விராட் கோலி,

இந்திய கிரிக்கெட் வீரர்.

விராட் கோலி, யானை குறித்து விரைவாக ட்வீட் செய்தார் ஆனால் அவர் இன்னும் (26.6.2020 நிலவரப்படி) அடிப்படை பிரச்சினைகள் குறித்து ட்வீட் செய்யவில்லை உதாரணமாக திப்ரு சைகோவா தேசிய பூங்காவில் எண்ணெய் துளைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது, அல்லது சமீபத்தில் அதே பிராந்தியத்தில் பஜ்ஜன் எண்ணெய் வயலில் தீ எரிந்தது குறித்து.

எனினும், கர்ப்பிணி யானையின் இத்தகைய வேதனையான மரணம் துயரமானது என்பது உண்மை. 1986 ஆம் ஆண்டிலிருந்து, ஆசிய யானை இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தால் அருகிவரும் உயிரினம் என பட்டியலிடப்பட்டுள்ளது, ஏனெனில் அதன் மக்கள் தொகை 50% குறைந்துள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், மக்கள் தங்களுடைய கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரம் மற்றும் சித்தாந்தத்தைப் பற்றி விரைவில் மோசமாக கருத முற்பட்டனர். இது இனவெறி போக்குகளின் பிரதிப்பலிப்பே, உண்மையான சுற்றுச்சூழல் பற்றிய கவலைகள் எதுவும் இல்லை என்று கூறுகிறேன். மேலும் யானைகளை ரயில்கள் மோதும் தொடர்ச்சியான சம்பவங்கள் இந்த கதையைப் போலவே தற்செயலானவை என்றாலும் அவை முக்கியத்துவம் பெறவில்லை என்பது இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றத்தை விளக்குகிறது. கேரளாவில் யானைகளுக்கு கொடுமை செய்யும் கதையில் இந்து அடிப்படைவாதிகள் தார்மீக உயர்நிலையை எடுக்க முடியும் என்பது முரண், ஏனென்றால் துஷ்பிரயோகம் மற்றும் பிற தவறான நடத்தைகளுக்கு உட்பட்ட இந்து கோவில்களுக்கு சொந்தமான வளர்ப்பு யானைகளின் நீண்ட மற்றும் சிக்கலான வரலாறு கேரளாவில் உள்ளது.

Comments