இந்தியாவில் கருப்பின மக்களின் வாழ்வு முக்கியமா ?




அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரின் காவல் துறை அதிகாரி டெரெக் சௌவின் ஆப்பிரிக்க அமெரிக்க மனிதரான ஜார்ஜ் ஃபிலாய்டைக் கொடூரமாக கொலை செய்திருப்பது சமீபத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த எதிர்ப்புக்களுக்கு அமெரிக்க காவல் துறை பதிலடி கொடுத்த விதம் அதன் ஆட்சியின் வன்முறையை அம்பலப்படுத்தியுள்ளது. உலகின் ஒவ்வொரு பிரசங்கம் மீதும் திணிக்கப்படும் அமெரிக்காவின் மையத்தன்மை ஒரு எதிர்பாராத நேர்மறையான முடிவுக்கு வழிவகுத்தது. திடீரென்று உலகம் #blacklivesmatter உடன் அக்கறை கொண்டுள்ளது, ஆனால் பிரேசில், கொலம்பியா மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் இதே போன்ற சம்பவங்கள் நடந்த போது கவனிக்க தவரியது. இந்த போக்கு மற்ற நாடுகள் அமெரிக்கா அளவிற்க்கு முக்கியத்துவம் பெறவில்லை என்பதைக் காட்டுகிறது. நமது சொந்தக் கொல்லைப்புறமான இந்தியாவில் உள்ள நிலைமையை ஆராய இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.

ஃபேர்னெஸ் கிரீம் (Fairess cream) விளம்பரம்

இந்தியாவில் நாம் முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஃபேர்னெஸ் கிரீம் (fairness cream) விளம்பரங்களைப் பார்த்து வளர்கிறோம். வழக்கமாக இதன் மையம் ஒரு கரும் நிறமுள்ள பெண் ஃபேர்னெஸ் கிரீம் பயன்படுத்துவதன் மூலம் தன்னை வெள்ளையாக மாற்றி அதனால் "கவர்ச்சியாக" ஆகிவிட்டதாக இருக்கும். பெரும்பாலும் இந்த விளம்பரங்கள் கிரீம் செயல்திறனை வலியுறுத்துவதற்காக பெண்ணின் நிறம் படிப்படியாக வெள்ளை ஆகுவதாகக் காட்டுகின்றன. இந்தியாவில் வெள்ளையானப் பெண் அல்லது ஆண் திருமணத்திற்கு விரும்பத்தக்கவர் என்பதை பெரும்பாலான திருமண விளம்பரங்கள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வண்ணமயமான சமூகம் ஆப்பிரிக்கவில் இருந்து புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பார்க்கிறது மற்றும் தொடர்பு கொள்கிறது?

வெள்ளைத்தோல் கொண்ட வாழ்க்கைத் துணைகளைக் கேட்கும் திருமண விளம்பரங்கள்

இந்திய தேசத்தின் "தந்தை" மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நடத்தையை நினைவு கூர்வோம். ஆங்கில கல்விமுறையில் படித்த காந்தி இனவெறியின் இரண்டு பாரம்பரியங்களை மரபுரிமையாகப் பெற்றார். முதலாவது சாதி அமைப்பு மூலம் வெளிப்படும் இனவாதத்தின் இந்திய பாரம்பரியம். இரண்டாவதாக, காலனித்துவ கல்வி அவரிடம் இனவெறிக்கான ஐரோப்பிய பாரம்பரியத்தை உள்ளடக்கியது, இது இங்கு மிகவும் பொருத்தமானது. ரோடீசியன் தென்னாப்பிரிக்காவின் இனவெறி மையப்பகுதிகளில் சட்ட பயிற்சியாளராக இருந்த காந்தி பூர்வீக தென்னாப்பிரிக்கரை அழுக்கு என்று அடையாளம் காண்பதில் ஆங்கிலேயர்களைப் பிரதிபலித்தார், அவர்களை தொடர்ந்து காஃபிர்கள் என்று அழைத்தார். ஆயினும் கூட, காந்தி உலகெங்கிலும் குரலற்றவர்களின் பிரதிநிதியாகக் காணப்பட்டார். டாக்டர் கிங் மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற கருப்பின விடுதலையாளர்களும் அவ்வாரே கூறினர். அவருடைய உள்ளார்ந்த இனவெறி பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லையா அல்லது பிராக்சிஸ் (praxis) என்ற பெயரில் கண்மூடித்தனமாக இருந்தார்களா என்பது வேறு விவாதம். இருப்பினும், அதன் பின்னர் விஷயங்கள் மாறிவிட்டன. ஆபிரிக்கா முழுவதும் அதன் குரல்கள் அவரது இனவெறி கருத்துக்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன மற்றும் பல்கலைக்கழக இடங்களில் அவரது சிலைகளை எழுப்ப மறுத்துவிட்டன.

சமகால இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆப்பிரிக்க நாட்டவருடனான அணுகுமுறைகள் காந்தியின் மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன. இந்தியாவில் வசிக்கும் ஆபிரிக்கர்கள் (பெரும்பாலும் மாணவர்கள்) நரமாமிசங்கள் என அவமானப்படுத்தபடுகிறார்கள் , மேலும் போதைப்பொருள் விற்பனை செய்பவர், விபச்சார புரோக்கர்கள் அல்லது குற்றவாளிகள் என ஒரே மாதிரியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் "கலு", "காலா" (கருப்பு நிறத்தைக் குறிக்கும்), அல்லது "ஹப்ஷி" (இந்தோ-பாரசீக பிரபுக்களின் எத்தியோப்பிய அடிமைகளைக் குறிக்கும்) போன்ற இனக் களங்கச் சொற்களை கேட்க நேரிடுகிறது.

சரியாகச் சொல்வதானால், நம்மைச் சுற்றியுள்ள சூழல் காரணமாக இந்த நடத்தை நம்மில் மிகவும் பதிந்துவிட்டது, பெரும்பாலான நேரங்களில் இனவெறி செயல்களை நாம் கவனிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, 2013 ஆம் ஆண்டில், மும்பை எஃப்சியின் கானா (Ghana) நாட்டைச்சேர்ந்த விளையாட்டு வீரர் யூசிப் யாகுபு, அவரை குரங்கு போல் அழைப்பதாக மொஹுன்பகன் ரசிகர்கள் மீது குற்றம் சாட்டினார். இது மிகவும் விசித்திரமானது, ஏனென்றால் அந்த நேரத்தில் பாகன் கேப்டன் ஓடாஃபா ஒகோலியும் கருப்பின மனிதர் தான், அதே ரசிகர்கள் பெருமையுடன் தங்கள் தோள்களில் அவரை சுமந்திருக்கிறார்கள். உணர்ச்சிவசபடும், பழிச் சொல் பயன்படுத்தும் ரசிகர்கள் கால்பந்து மைதானத்திற்கு புதிதல்ல, ஆனால் இந்த ரசிகர்கள் அறியாமல் எல்லை மீறி சென்றுவிட்டன்னர். புள்ளி என்னவென்றால், இனவெறி எவை என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும், பின்னர் நம்மில் மறைந்திருக்கும் அந்த போக்குகளை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.

வன்முறை என்பது இனரீதியானது மட்டுமல்ல. 2014 ஆம் ஆண்டில், டெல்லியின் அப்போதைய சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, தென் டெல்லி பகுதியில் சோதனை நடத்தினார், ஆப்பிரிக்கர்கள் "போதைப்பொருள் மற்றும் விபச்சாரம் தொழில் " நடத்தியதாக குற்றம் சாட்டினர். சோதனையின் போது, அமைச்சர் ஒரு ஆப்பிரிக்க பெண்ணை சிறுநீர் மாதிரியை பொது இடத்தில் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தினார். 2016 ஆம் ஆண்டில், ஒரு தான்சானிய பெண் தாக்கப்பட்டு, உடைப் பறிக்கப்பட்டு, அவரது வாகனம் (car) பெங்களூரில் தீ வைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், கிரேட்டர் நொய்டாவில் (near delhi) ஒரு கும்பல் பல ஆப்பிரிக்க மாணவர்களை மாமிசம் உண்பவர்கள் என்ற சந்தேகத்தின் கீழ் தாக்கியது. பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருந்தது.

டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி. 
அவர் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது சோதனை நடத்தினார். 
ஒரு ஆப்பிரிக்க பெண் சிறுநீர் மாதிரியை பொதுவெளியில் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சமுதாயத்தின் பிற கூறுகளைப் போலவே, இனவெறி கலைகளில் பிரதிபலிக்கிறது: பாலிவுட்டின் கருப்பு முகம் நீண்ட வரலாறு உடையது, இந்திய நடிகர்கள் கருப்பு முகம், ஆப்ரோஸ் (ஆப்பிரிக்கப் பாணி கூந்தல்) மற்றும் மிகைப்படுத்தப்பட்ட உதடுகளை அணிந்து, கொடுறமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வெள்ளை நிற நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை வகிப்பதற்காக அவர்களின் தோலை கருமையாக்கியுள்ளனர், குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் உள்ள கதாபாத்திரங்களை சித்தரிக்கும் போது, உதாரனமாக பாலா மற்றும் சூப்பர் 30 போன்ற சமீபத்திய திரைப்படங்களில் அவ்வாறு செய்துள்ளார்கள். இந்தியாவின் சமகால கலை காட்சிகள் கூட இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஆப்பிரிக்க மக்களின் மீதானா இனவெறி நோக்கிய சிந்தனைக்கு மாறானதாக இல்லை.

ஹிருத்திக் ரோஷன் தனது சூப்பர் 30 திரைப்படத்தில் பழுப்பு நிறத்தில் தொன்றினார்.

இந்த இன வெறி போக்குகளில் வெளி நாடுகளில் புலம் பெயர்ந்த இந்திய சமூகம் சமமாக நடந்து கொள்கிறது. அவர்கள் சில நேரங்களில் தவறாக அரபு அல்லது ஆபிரிக்கர்கள் என்று அடையாளம் காணப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் தங்கள் கருப்பின மற்றும் ஹிஸ்பானிக் சகோதரர்களை விட மேன்மையானவர்கள் என தவறான உணர்வை கொண்டுள்ளனர். உதாரணமாக, புகழ்பெற்ற இந்திய அமெரிக்க கணினி விஞ்ஞானி ரோஹித் பரிக், ட்ரம்பின் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு கருத்தை எதிரொலித்தற்காகவும், இந்திய குடியேறியவர்களுடன் ஒப்பிடும்போது ஹிஸ்பானிக் குடியேறியவர்கள் போதிய அளவில் கல்வி கற்கவில்லை என்றும் கூறியதற்காகவும் 2018 ஆம் ஆண்டில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானர்.


இத்தகைய அவதூறு இன விவரக்குறிப்புகள் பொதுவானது புலம்பெயர்வோர்களுக்கான செய்தி பலகைகளில்.

ஜார்ஜ் ஃபிலாய்டுக்கு உலகம் துக்கம் அனுசரிக்கும் வேலையில், இனவெறி தொடர்பான நமது சொந்த சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளை ஆராய்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம்.

Comments